Bramma Sri Gowry Thasa Sharma

Gowry Thasa Sharma

Deceased: 02 April 2025

பிரம்மஸ்ரீ. கௌரிகணேசக் குருக்கள் கௌரிதாச சர்மா அவர்கள் 00-04-2025 புதன்கிழமை இறைபதமடைந்தார்.

அன்னார்  காலஞ்சென்ற கௌரிகணேசக் குருக்கள் - ரதிதேவி தம்பதியினரின் புதல்வனும், 

சிவரூபக் குருக்கள் - ஜெயலக்சுமி தம்பதியினரின்  மருமகனும்,

ராஜீவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயவர்ஷ சர்மா, அக்ஷர சர்மா ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 49 செம்மணி வீதி நாயன்மார்கட்டு குரு பீடாதிபதி வாஸஸ்தலத்தில்(குருசாமி இல்லம்) 03-04-2025ம் திகதி வியாழக்கிழமை மாலை முதல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் 04-04-2025ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு இறுதி கிரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு 1:00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

மேற்படி 13ம் நாள் கிரியைகள் அனைத்தும் இணுவில் பரராஜசேகர பிள்ளையார் கோயிலடியில் உள்ள அன்னாரின் சகோதரர் இல்லத்தில் நடைபெறும் என்பதை உற்றார், உறவினர் நண்பர்கள் அடியவர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/04/2025 04:00)