யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிறேஸ் பாக்கியரத்தினம் வெற்றிவேலு அவர்கள் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமு - பத்தினி தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற ஜோர்ஜ் வெற்றிவேலு (கணக்காளர் - கல்வித் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குணரத்தினம், ஞானரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இரத்தினவதனா (ஓய்வுபெற்ற ஆசிரியை - சென் ஜோன்ஸ் கல்லூரி), இரத்தினமாலா, காலஞ்சென்ற இரத்தினராசா (முன்னாள் பொறியியலாளர் - கல்வி திணைக்களம் வடக்கு கிழக்கு), இரத்தினவேல் (யாழ். கொடிகாமம் அரசினர் வித்தியாலயம்), காணாமலாக்கப்பட்ட இரத்தினசிங்கம், இவ்லின் இரத்தினலீலா (முன்னாள் யாழ்ப்பாணக்கல்லூரி ஆசிரியை, கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அருட்செல்வம் (ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் - சென் ஜோன்ஸ் கல்லூரி), கருணாமூர்த்தி (ஓய்வு பெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்), பிரபதாரணி (கனடா), சுபாங்கனி, ராஜ்குமார் (கனடா) ஆகியோரின் மாமியாரும்,
மேரிகாஞ்சனா (அரச ஈட்டு முதலீட்டு வங்கி - வவுனியா), சுஜந்தன் (பொறியியலாளர் - கனடா), மாதுரி (பொறியியலாளர்), தெபோரா (பல்கலைக்கழக மாணவி), டானியல்ராஜ் (பல்கலைக்கழக முகாமைத்துவ மாணவன்), ரூத் காருண்யா (HNDE-English), டினோஜன், இவாஞ்சலின், நிம்ரோ (தொழில்நுட்ப உத்தியோகத்தர்), அன்ரா (கனடா) ஆகியோரின் பேத்தியும்,
ஜெசிக்கா, ஜெனிற்றா, ஜெரோமி ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 11-06-2025 புதன்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நேரியதூது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
முகவரி:-
இரத்தின வாசம்,
மட்டுவில் தெற்கு,
சாவகச்சேரி.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org

