திருமதி. குணரத்தினம் சகுந்தலாதேவி

குணரத்தினம் சகுந்தலாதேவி

தோற்றம்: 20 பெப்ரவரி 1949 - மறைவு: 17 ஆகஸ்ட் 2026

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. குணரத்தினம் சகுந்தலாதேவி அவர்கள் 17-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா - பாக்கியம் தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - அன்னமா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சண்முகராசா (கனடா), ராஜேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற சிவலிங்கராசா, கமலாதேவி (இலங்கை), சந்திரதேவி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், யோகம்மா, செல்வராணி, செல்வராசா, யோகராணி ஆகியோரின் மைத்துனியும்,

சுகந்தினி (இலங்கை), சந்திரசேகரன் (ஜேர்மனி), குணசேகரன் (ஜேர்மனி), சுபாசினி (கனடா), உதயசேகரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீநாதன், றாகினி, பாஸ்கரன், சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியும்,

வரலக்ஸ்மன், பனுஷன், தீபிகா, லவன், அட்சயா, அஸ்வின், சபிதா, சஞ்சீவன், சஸ்வின், அஜனா, அனுசன் ஆகியோரின் பேத்தியும்,

ரஜிதா, சாய் சுமித்ரா, மனோஜ், வித்தியகர், கீர்த்தனா பேரப்பிள்ளைகளின் வாழ்க்கைத் துணைகளும்,

பவப்பிரிதா, துகாரிதா, மித்ரன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-08-2026 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அலடி ஒழுங்கை, கோண்டாவில் கிழக்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கட்டையாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/08/2026 00:00)