திருமதி. குணரட்ணம் தங்கமலர்
தோற்றம்: 02 மே 1945 - மறைவு: 15 டிசம்பர் 2023
யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை 2ம் யூனிற், தருமபுரம் சுண்டிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் தங்கமலர் அவர்கள் 15-12-2023 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவாஜினி (இலங்கை), சிறீதரன் (ஜேர்மனி), மாலினி (கனடா), சுகந்தினி (கனடா), றமேஸ்தரன் (ஜேர்மனி), குணேஸ்தரன் (அவுஸ்திரேலியா), யோகவதனி (இலங்கை), குபேந்தினி (இலங்கை), வினோதரன் (இலங்கை) ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-12-2023 திங்கட்கிழமை அன்று 96/8, பிரமந்தனாறு இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிரமந்தனாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
www.tamilthakaval.org
