திருமதி. குணரத்தினம் தவமணி
மறைவு: 27 மார்ச் 2026
யாழ். நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும், இல- 680 விநாயகபுரம் துணுக்காயை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. குணரத்தினம் தவமணி அவர்கள் 27-03-2026 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
புவனேந்திரன் (வவுனியா), சண்முகராசா (பிரான்ஸ்), சோமலதா (துணுக்காய்), காலஞ்சென்ற கோணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலாயினி, சசிகலா, தர்மநாயகம், குவாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தாரணி, வினுஷா, லக்சன், கௌசி, டிலைக்சன், விதுசன், சதீவன் ஆகியோரின் பேத்தியும்,
ஆலிஷாவின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பாலி ஆறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
