திரு. குணரட்ணம் இரத்தினேஸ்வரன்

(ஆசிரியர்)

குணரட்ணம் இரத்தினேஸ்வரன்

மறைவு: 05 டிசம்பர் 2024

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, வவுனியா ஆகிய இடங்களில் வசித்தவருமாகிய திரு. குணரட்ணம் இரத்தினேஸ்வரன் அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை  அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,

மோகனாம்பிகை (ஆசிரியை) அவர்களின் அன்புக்கணவரும்,

வேணுஜனின் அன்புத் தந்தையும்,

ரத்னேஸ்வரி, ராஜேஸ்வரி, சௌந்தரேஸ்வரி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற சர்வேஸ்வரன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,

மருதையினார், கிரிதரன், லோகேந்திரராஜா, நாகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/12/2024 05:00)