திருமதி. குணசேகரம் மேரி றோசலின்
தோற்றம்: 22 டிசம்பர் 1942 - மறைவு: 18 ஏப்ரல் 2025
யாழ். மாதகல் பற்றிமா வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குணசேகரம் மேரி றோசலின் 18-04-2025 வெள்ளிக்கிழமை விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை - விசிறித்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற அருளப்பு - அந்தோனியாப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அல்போன்ஸ் குணசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற லூர்தம்மா (புஸ்பம்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை அவர்களின் அன்பு மைத்துனியும்,
யுடெற் குணசீலி கேட்டி (சுவிஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,
கொண்செப்ரா (சூட்டி- நோர்வே) அவர்களின் அன்பு சிறிய தாயாரும்,
காலஞ்சென்ற கிறிஸ்தோத்திரம் (G.S கிருபா), டொன் ராஜன் (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிருந்தா, ஜொகானஸ் (சுவிஸ்), கிறிஸ், சிசிலி, மெரிற்றா, கிறிஸ்ரியான், கிறிஸ்வின், தெயா (நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அருட்தந்தை பேடினன் அவர்களின் அன்பு மாமியாரும்,
மத்தியாஸ், தாவித், அலெக்ஸ்சாண்டர் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் சரீரம் 22-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் நல்லடக்க திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் மாதகல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
