Mr. Gunasingham Gananathan
Date of Birth: 30 August 1959 - Deceased: 14 February 2026
யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தினைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மற்றும் நீர்வேலி மேற்கு மாசிவனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணசிங்கம் கணநாதன் அவர்கள் 14-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணசிங்கம் - புனிதவதி தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை - கனகம்மா தம்பதியினரின் மருமகனும்,
லதா அவர்களின் அன்புக் கணவரும்,
பேபி சரோசா, காலஞ்சென்ற சோதிநாதன், பேரின்பநாதன் ஆகியோரின் சகோதரனும்,
சாஜினி, சுபாஜினி, திஜேந்திரன், டாட்ஷாயினி, கஜேந்திரன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
அரவிந்தன், யயிந்தன், சாருகா, நிரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திருஸ்வி, அர்ஜிஸ், ஜினுபா, ஜிஸ்னுகா, கேஸ்விகா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னராின் இறுதிக்கிரியைகள் 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
