திரு. குருசாமி கணேசலிங்கம்

(ஓய்வு பெற்ற கிராம சபை உத்தியோகஸ்தர், அகில இலங்கை சமாதான நீதிவான்)

குருசாமி கணேசலிங்கம்

மறைவு: 25 மார்ச் 2025

யாழ். புளியங்கூடலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குருசாமி கணேசலிங்கம் அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை சிவபதம் ஏய்திவிட்டார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருசாமி (சமாதான நீதிவான்) - நாகம்மா தம்பதியினரின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்ற சதாசிவம் தம்பதியினரின் மருமகனும்,

சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அமுதினி (ஆசிரியை - கொக்குவில் இந்துக்கல்லூரி), அருளினி (ஆசிரியை - மகாமாரி முன்பள்ளி), அர்ச்சனா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலசுப்பிரமணியம் (ஜேர்மனி), கலைமகள் ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற குணசிங்கம் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் - யாழ்ப்பாணம்), லீலாவதி, திருவருள், தேவகி, இந்திரன், கலைவாணி (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

சாந்தகிரிநாதன் (உப அதிபர் - புதுக்குடியிருப்பு றோ.க.வி),சர்வேஸ்வரன், லோகேஸ்வரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாத்வவகா, கவினுகா, சபீகா, சங்கவி, யாதவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.  

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-03-2025 புதன்கிழமை காலை 8:00 மணியவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் புகழுடல் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/03/2025 04:00)