திருமதி. ஹரியெற்றா மங்களதாஸ் (சரோ Teacher)
(முன்னாள் ஆசிரியயை - கார்மேல் பாலர் பாடசாலை)
மறைவு: 23 செப்டம்பர் 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இல- 19/1, மருதடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஹரியெற்றா மங்களதாஸ் அவர்கள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - சொர்ணம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இம்மானுவேல் - திரேசம்மா தம்பதியினரி அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மங்களதாஸ் (ஓய்வுநிலை குழாய் பொருத்துநர் - யாழ் மாநகரசபை) அவர்களின் அன்பு மனைவியும்,
றஜிதா (ஆசிரியை - யாழ். கொட்டடி நமசிவாய வித்தியாலயம்), நேருஷா (ஆசிரியை - யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம்), காலஞ்சென்ற குயிலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சர்வேஸ்வரன் (Business), லியோன் (Business), ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிலோமினா (பிறேமா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாலேந்திரன், மேரி கொண்செப்ரா, கிறிஸ்ரி அன்ரனிதாஸ், மேரி எட்மன்ரா மற்றும் குணேந்திரன், விமலேந்திரன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பபிதா பாபு (மாகாணக் கல்வித் திணைக்களம் - வடக்கு மாகாணம்) அவர்களின் பாசமிகு சித்தியும்,
கார்த்திகன் (யாழ். புனித பத்திரிசிரியார் கல்லூரி), மரிய யோஷிதா, சுபேனா (யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரி பேத்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் 24-09-2025 புதன்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு, யாழ். புனித திரேசம்மா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
