(12-01-2026 திங்கட்கிழமை அன்று நடைபெற்றுது.)

Mrs. Iaiyathampy Annaratnam

Iaiyathampy Annaratnam

Date of Birth: 18 September 1936 - Deceased: 10 January 2026

யாழ். கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இளையதம்பி அன்னரத்தினம் அவர்கள் 10-01-2026 சனிக்கிழமை அன்று எறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு - சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

சீவரத்தினம் (கைலேஸ்-இலங்கை), யோகேஸ்வரன் (குஞ்சன்-இத்தாலி), விஜயலட்சுமி (விஜி-சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருபாமலர், சரோஜாதேவி (கனடா), சோதி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, மங்கையற்கரசி , பராசத்தி, பாக்கியரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம் , கந்தையா , சுப்பிரமணியம் , முருகேசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜசோதா (நோர்வே), ஜசோதரன் (பிரான்ஸ்), ஜெனகன் (இலங்கை), ஜெயந்தன் (ஜேர்மனி), சுபாங்கினி (இத்தாலி), தனுஷா (கனடா), சிந்துஜா (சுவிஸ்), சாருஜன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரம்மிஜா, காலஞ்சென்ற ரித்திஜா (நோர்வே), பவித்திரா, மயூரிகா (இலங்கை), ஜசிரா (ஜேர்மனி), கவீஸ்வரன், கெவின் (இத்தாலி), அஷ்வின், அகனியா, அபிரா (கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/01/2026 00:00)