திரு. இலங்கையர் ஸ்ரீகுகஞானசோதி (வாத்தியார் அண்ணை)

இலங்கையர் ஸ்ரீகுகஞானசோதி (வாத்தியார் அண்ணை)

மறைவு: 02 நவம்பர் 2025

யாழ். கைதடி மேற்கைப்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இலங்கையர் ஸ்ரீகுகஞானசோதி அவர்கள் 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இலங்கையர் (இலங்கை வாத்தியார்) - சின்னப்பிள்ளை  தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - இராசமலர் தம்பதியினரின் மூத்த மருமகனும்,

புவனேஸ்வரி (பவளம் அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற தன்மாவரதரின் (புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி) ஒன்று விட்ட சகோதரனும்,

கிருத்திகா (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் - பூநகரி), தினேஷன் (மின் இணைப்பாளர்), விதூஷன் (இலங்கை மேர்ச்சன்ட் வங்கி யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலமுருகன் (அதிபர் - யாழ். அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரி) அவர்களின் அன்பு மாமனாரும்,

அகரனின் பாசமிகு பேரனும்,

இராஜேஸ்வரி, பரமேஸ்வரி (ஓய்வு நிலை ஆசிரியை - யாழ். பளை இந்து ஆரம்பப் பாடசாலை), விக்னேஸ்வரன் (அமெரிக்கா), யோகேஸ்வரி, தியாகேஸ்வரி, ஜெகதீஸ்வரி (சி.க.கூ. கிளிநொச்சி), பத்மகுமாரி (சுவிஸ்), சுதாஜினி (ஜேர்மனி), சுதாகரன் (கனடா) ஆகியேரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 03-11-2025 திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 02.00 மணியளவில் திருவுடல் ஊரியான் ஜவினைப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/11/2025 00:00)