திரு இலங்கைகோன் பல்லவநம்பி

இலங்கைகோன் பல்லவநம்பி

மறைவு: 03 செப்டம்பர் 2020

வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும் Mississauga, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு இலங்கைகோன் பல்லவநம்பி September 03, 2020 அன்று அகாலமானார்.

அன்னார் இலங்கைகோன், மனோரஞ்சனி அவர்களின் பாசமிகு புதல்வனும் ,
 
புண்ணியமூர்த்தி, விஜயலக்‌ஷ்மி தம்பதியினரின் மதிப்புக்குரிய மருமகனுமாவார்.

அன்னார் அனிதாவின் பிரியமான கணவரும் ஜெய்சன், கஜானன் , பாலனன் ஆகியோரின் பாசத்துக்குரிய தந்தையுமாவார். 

அன்னார் கிருஷ்ணராஜ், காலஞ்சென்ற பாலராஜ், காலஞ்சென்ற ஜெயராஜ் , விஜிதா ஆகியோரின் மதிப்புக்குரிய மைத்துனரும்,
 
மேனகா , வெங்கடேஷ்வரன் ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும் ,
 
நயங்காவின் மாமாவும்  சஞ்சனின் பெரியப்பாவுமாவார்.

அன்னார் Dr. சத்தியசீலன், நிர்மலா காலஞ்சென்ற மனோகரன் , பத்மா, கலிங்கராஜன் , பத்மினி ஆகியோரின் பிரியமான மருமகனும்,
 
காலஞ்சென்ற கிருஷ்ணசாமி , சத்தியவாணி ஆகியோரின் பாசமிகு பெறாமகனுமாவார்.

அன்னார் சாந்திமதி, இந்துமதி , நித்யா ஆகியாரின் ஒன்றுவிட்ட சகோதரனும் ,
 
சரவணபவன், ராஜ்குமார், முகுந்தன் ஆகியோரின் மதிப்புக்குரிய மைத்துனரும் ,
 
அவர்  நர்மதா, ஹேமமாலினி, சேதுமாதவன், ஊர்மிளா , பிரசன்னா , சனோமியா ஆகியோரின் மைத்துனரும்,
 
அன்பழகன், குமரன், நர்மதா, கிரீபன் , பூஜா, பிரசன்னகுமார் ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும்,
 
பிரகாஷ், ஆகாஷ் , சந்தோஷ், சர்வேஷ் , ஐவன், ஆறன் , நீலன், அரண்யா , கெவின், ஜியா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ,
 
ஹரி, ஜோதி, மோகன், லரிஷா, சேரன் ஆகியோரின் நேசத்துக்குரிய சித்தப்பாவுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் 

Funeral Home :-
 
St. John’s Dixi Chapel
737 Dundas Street East
Mississauga 
ON , Canada
 
பார்வைக்கு :-
 
சனிக்கிழமை (12 Sep ) 5 pm to 9 pm
ஞாயிற்றுக்கிழமை (13 Sep) 8 am to 9 am

கிரியை :-
 
ஞாயிற்றுக்கிழமை (13 , Sep) 9 am to 11 am

கிரியைகளைத் தொடர்ந்து தகனக்கிரியைகள் இடம் பெறும்.

தகவல்:-
 
கிருஷ்ணராஜ் ( மைத்துனர்):+ 416 906-1981
சேதுமாதவன் ( மைத்துனர்): + 416 858 4259
சாந்திமதி ( சகோதரி):  +44 7878839431
விஜிதா ( மைத்துனி): +44 2084715097
நர்மதா ( மைத்துனி):  +44 7548 922624

Note: இறுதி வணக்க நிகழ்வுகள் COVID-19 பாதுகாப்பு விதி முறைகளுக்கு அமைவாக இடம் பெறும். அனைவரும் முக கவசம் ( mask) அணிந்து வருமாறு பணிக்கப்பட்டுள்ளனர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/09/2020 08:54)