Mr. Ilayathambi Mayilvahanam

Ilayathambi Mayilvahanam

Date of Birth: 05 April 1949 - Deceased: 20 May 2026

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி மயில்வாகனம் அவர்கள் 20-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி - வள்ளியம்மை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற சுந்தரம் - செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,

சௌந்தர லக்ஷ்மி (ரூத்) அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷியா, கிறேஷியன் (சட்டத்தரணி), கிறிஸ்டீவன் ஆகியோரின் அன்பு தந்தையும்,

அன்புவதனியின் (சட்டத்தரணி) மாமனாரும்,

அபிஹேல், அபினவ் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 21-05-2026 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை ஈசன்ஸ் மலர்ச்சாலை (இல- 148 பிரதான வீதி, யாழ்ப்பாணம்) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மறுநாள் 22-05-2026 அன்று அன்னாரின் கொழும்பு இல்லத்தில் (இல- 25-1/1, அலெக்சான்ரா வீதி, வெள்ளவத்தை) காலை 9.00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.30 மணியளவில் இறுதிப் பிரார்த்தனைகள் நடைபெற்று, கல்கிஸ்சை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/05/2026 00:00)