Mr. Ilayathambi Selvarajah

(இளைப்பாறிய மருந்துக் க​லவையாளர்)

Ilayathambi Selvarajah

Date of Birth: 30 March 1936 - Deceased: 15 January 2024

யாழ். காளியானை புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மேற்கு மாசுவனை வசிப்பிடமாகவும் கொண்ட இளைதம்பி செல்வராசா அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி - சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், செல்லப்பா - அன்னபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, தில்லைநாதர், அன்னலட்சுமி, இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருஷ்ணபவான் (லண்டன்), தேவகி (ஆசிரியை - யாழ்/தேவரையாளி இந்துக் கல்லூரி), ரேவதி (ஆசிரியை - யாழ்/நீர்வேலி றோ.க.த.க. பாடசாலை), லோகானந்தன் (லண்டன்), நித்தியாநந்தன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதிர்தா (லண்டன்), யோகேந்திரன் (ஆசிரியர்- யாழ்/பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை), குமரசிறி (ஆசிரியர் - யாழ்/அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம்), சுகன்யா (லண்டன்), நுருட்ஜலா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துஷானி, ஜனோஜன், தனுஷன், வேணுஷன், மதுர்ஷன், கவிஷாயினி, கலையரசி, எழிலவன், நிலக்‌ஷி, லக்‌ஷன், சௌமி, ஆதூரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-01-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னரி முற்பகல் 11.00 மணியளவில் சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-

மாசுவன்,

நீர்வேலி மேற்கு,

நீர்வேலி.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/01/2024 05:00)