Mr. Ilayathambi Sivalingham

(பிரபல ஜோதிடர்)

Ilayathambi Sivalingham

Date of Birth: 16 November 1948 - Deceased: 07 July 2025

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் முருகேசர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி சிவலிங்கம் அவர்கள் 07-07-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கந்தையா - தையலம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

வதனி, ஜெயந்தன், ஜீவிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சீவரத்தினம், இராசமலர், நேசமலர், காலஞ்சென்ற புஸ்பமலர், யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இரத்தினசிங்கம், காலஞ்சென்ற பரராஜசிங்கம், வன்னியசிங்கம், பாலசிங்கம், கமலாதேவி, குலமணிதேவி ஆகியோரினு அன்பு மைத்துனரும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-07-2025 புதன்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் இல - 49, முருகேசர் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, காலை 9.30 மணியளவில் திருவுடல் வேலணை சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/07/2025 04:00)