Mrs. Indrajothi Sivakosari

Indrajothi Sivakosari

Deceased: 12 July 2025

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இந்திரஜோதி சிவகோசரி அவர்கள் 12-07-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - கண்ணகைப்பிள்ளை தம்பதியினரின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி - நாகரத்தினம் தம்பதியினரின் மருமகளும்,

கல்வயலைச் சேர்ந்த காலஞ்சென்ற குமாரசுவாமி சிவகோசரி (ஜோதி புடவை உரிமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சோபனா (இலண்டன்), அனுஷா (இலண்டன்), ஜனகன், தேவகி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சங்கர் (இலண்டன்), நடனசீலன் (இலண்டன்), மதுரிகா (BOC-பரந்தன்), ஐங்கரன் (பிரதி முகாமையாளர் - மக்கள் வங்கி) ஆகியோரின் அன்பான மாமியாரும்,

சிவஹரிஸ், சாதனா, ஆருத்ரன் ஆகியோரின் அன்பான அம்மம்மாவும்,

அகன்யா, சிவானுஜன் ஆகியோரின் அன்பான அப்பம்மாவும்,

காலஞ்சென்ற கைலேஸ்வரன் (ஓய்வு நிலை அதிபர் - சாவ. இந்து ஆரம்ப பாடசாலை), கருணாகரன் (மருந்தாளர்), காலஞ்சென்ற மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு தங்கையும்,

சந்திரஜோதி, மங்களஜோதி (பிரான்ஸ்), குமரேந்திரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பான அக்காவும்,

வனிதாதேவி, சோமாவதி, மல்லிகாவதி, சண்முகநாதன், காலஞ்சென்ற அற்புதநாதன், ஈஸ்வரி, காலஞ்சென்ற பிறைசூடி, குமரகுரு, நந்தகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சந்திரலதா, நிர்மலன், மனோகரன், நிரஞ்சன், யதுர்சனா ஆகியோரின் அன்பு மாமியும்,

சஜேந்திரன், கிரிசாந்தன்,  நிவேதா, அருனேஷ் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

கரிதர்ஷன், கவிநயா, கவினேஷ், டிலூசன் யுஹான் பினோதா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-07-2025 திங்கட்கிழமை காலை 08.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/07/2025 04:00)