Mrs. Indrakumar Sakunthaladevi
Date of Birth: 29 March 1969 - Deceased: 26 July 2026
யாழ். மாவிட்டபுரம் சாயுடையைப் பிறப்பிடமாகவும், மருதனார்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இந்திரகுமார் சகுந்தலாதேவி அவர்கள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - பூமணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - உத்தரகோச மங்கையர்க்கரசி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
இந்திரகுமார் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நிருசன் (கனடா) பாசமிகு தாயாரும்,
சரோஜாதேவி (ஓய்வு பெற்ற ஆசிரியை) சாரதாதேவி (அவுஸ்திரேலியா), கிருபாகரன் (ஜேர்மனி), பிரபாகரன் (ஜேர்மனி), ஆகியோரின் அன்பு சகோதரியும்,
குலசேகரம், மகேந்திரன் (அவுஸ்திரேலியா), ஷோபனா (ஜேர்மனி), அனுசியா (ஜேர்மனி), முத்துவேல் செட்டியார், சுசிலாதேவி, ரவீந்திரகுமார் (இலண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,
விதுர்சிகன் (பிரான்ஸ்), ஜதுர்சிகன் (பிரான்ஸ்), சுஜன் ஆகியோரின் சிறியதாயாரும்,
லக்ஷன், லதன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பெரியம்மாவும்,
சரண்யா, சாரங்கா, சாகித்தியா, சாருஜன், உஜானிகா, சைனிகா, சகீன் (ஜேர்மனி) ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-07-2026 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 611 8665
+94 72 274 2618
www.tamilthakaval.org
