Mr. Indrakumar Subramaniam
(Agency Supervisor- Ceylinco Life)
Date of Birth: 20 September 1957 - Deceased: 13 July 2024
யாழ். இமையாணன் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இந்திரகுமார் சுப்பிரமணியம் அவர்கள் 13-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (Prison Jailer)-புவனேஸ்வரி தம்பதியினரின் ஏக புதல்வனும்,
உடுவிலைச் சேர்ந்த நவரட்ணம்-மாமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கருணாளினி (சித்திரா) அவர்களின் ஆருயிர் கணவரும்,
அருண், தரண் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புஷ்பமாலா, புஷ்பவதனா (வசந்தி), புஷ்பலதா (சசி) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
சிவலிங்கம், சங்கர், பிரபாளினி (ரூபி) ஆகியோரின் மைத்துனரும்,
மாயா (லண்டன்), மயூரா, விஷ்ணுகரன் (மலேசியா), ஐங்கரன், செந்தூரன், அபர்ணா ஆகியோரின் தாய்மாமனும்,
விதுஷாவின் மாமனாரும்,
வியக்னா, ஆத்விக் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 13-07-2024 சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையும், 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
