திருமதி. இந்திராணி மகாலிங்கம்
(ஓய்வுபெற்ற ஆசிரியை)
தோற்றம்: 17 மார்ச் 1957 - மறைவு: 02 மே 2026
திருகோணமலை பிரதான வீதியை பிறப்பிடமாகவும், விகாரை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இந்திராணி மகாலிங்கம் அவர்கள் 02-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னதுரை - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாலிங்கம் (விக்னேஸ்வரா ஸ்டோர்ஸ் (VVS கடை) உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரநாதன் (இலண்டன்), தவமலர் (இலண்டன்), தவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தனுஷா (இலண்டன்), நிஷாந்தன் (சுவிஸ்), மயூரா (இலண்டன்), மைதிலி, நிவேதிக்கா (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரசாத் (இலண்டன்), அஞ்சலி (சுவிஸ்), குலராஜகரன் (இலண்டன்), சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்வமணி (இலண்டன்), வரதராஜா (இலண்டன்), கமலேஸ்வரி (ஆசிரியை, செல்வநாயகபுரம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கீர்த்தனன், ஹரிராம், லஷினி, அனினியா, அயானா, சயன், ஜெயன், அஷ்மிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல- 19C, விகாரை வீதி,
திருகோணமலை.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 288 9690
www.tamilthakaval.org
