Mrs. Indrani (Darly) Sabaratnam
(ஹார்ட்லி கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியை)
Date of Birth: 24 June 1933 - Deceased: 27 September 2026
அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. இந்திராணி சபாரத்தினம் அவர்கள் 27-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், செல்வி, ரூபா, வினோ ஆகியோரின் அன்பான தாயாரும்,
சுரேஷ் ஒலேகாசேகரேம், டேனியல் உதயகுமார், என்னியோ புரட்டோ ஆகியோரின் அன்பான மாமியாரும்,
ஐசக், ஷாலோம், ஜாரெட், கெரன், ஜெஷர் மற்றும் ஜோவா ஆகியோரின் பாசமிக்க பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான விஜேசூரியர் (மலேசியா), ஜெயசிங்கம் (மலேசியா) மற்றும் ரூபி பாலசிங்கம் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பேர்லி பிரான்சிஸ் (இலங்கை), காலஞ்சென்ற டொம் ராஜதுரை (இலங்கை) ஆகியோரின் அன்பிற்குரிய சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-10-2026 வியாழக்கிழமை அன்று குடும்பத்தினருக்கான தனிப்பட்ட பார்வை: முற்பகல் 10.00 மணி முதல் 10.30 மணி வரையும், பொது பார்வை: முற்பகல் 10.30 மணி முதல் 11.00 மணி வரையும் New Covenant Pentecostal Church (681-685 Heatherton Road, Clayton South 3169) இல் வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதி ஆராதனைகள் நடைபெற்று, சரீரம் Springvale Botanical Cemetery (Joshua Jordan Lawn), 600 Princes Highway, Springvale 3171) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
