திருமதி. இந்திராணி ஶ்ரீதரன்

இந்திராணி ஶ்ரீதரன்

தோற்றம்: 09 மே 1948 - மறைவு: 24 ஜூன் 2024

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம், வௌ்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இந்திராணி ஶ்ரீதரன் அவர்கள் 24-06-2024 திங்கட்கிழமை அன்று வௌ்ளவத்தையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா-மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான நன்னித்தம்பி-அன்னப்பா தம்பதியினரின் மருமகளும்,

ஶ்ரீதரன் (திருநெல்வேலி) அவர்களின் அன்பு மனைவியும்,

நடேஷ்குமார், சத்தியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேந்ராணி, புஷ்பராணி ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பரமசிவம், பரமேஷ்வரி மற்றும் பாலபாஸ்கரன், பாபுசுகுமார் ஆகியோரின் மைத்துனியும்,

அபர்ணா, கோகுலன் ஆகியோின் மாமியாரும்,

அபினாஷ், நிகாஷ், ஆர்ஷிகா, பிரித்திகா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 26-06-2024 புதன்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-06-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணயிளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் பொரளை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/06/2024 04:00)