திருமதி. இந்திராணி தேவகிருஷ்ணா
(இளைப்பாறிய இரசாயனவியல் ஆசிரியர்,மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி இந்து கல்லூரி- கொழும்பு)
தோற்றம்: 04 பெப்ரவரி 1947 - மறைவு: 05 நவம்பர் 2021
மலேசியாவைப் பிறப்பிடமாகவும் 557, கஸ்தூரியர் வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டவரும் மற்றும் மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டி-இந்து கல்லூரி கொழும்பு ஆகியவற்றில் ஆசிரியையாக கடமையாற்றி இளைப்பாறிய இரசாயனவியல் ஆசிரியர் திருமதி இந்திராணி தேவகிருஷ்ணா அவர்கள் நேற்று 05-11-2021ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வன்னியசிங்கம் தங்கராஜம் தம்பதியினரின் அன்பு மகளும்,
இலகுப்பிள்ளை தேவகிருஷ்ணா (முன்னாள் மருந்தாளர் கன்னாதிட்டி, கார்கில்ஸ் பூட்சிட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணப்பிரியா (முன்னாள் இந்தியன் வங்கி ஊழியர்) அவர்களின் அன்பு தாயாரும்,
சுரேஷ் (சிரேஷட மதிப்பீட்டாளர், மதிப்பீட்டு திணைக்களம், வவுனியா) அவர்களின் மாமியாரும்,
காலஞ்சென்ற இரட்ணசிங்கம், தவமணி, இராஜசிங்கம் மற்றும் செல்வராணி (இளைப்பாறிய இலங்கை வங்கி முகாமையாளர்), பாலசிங்கம் ஆகியோரின் சகோதரியும்,
பிரனீத், விஷ்வா (எவர்ஷைன் பாலர் பாடசாலை), அகன்யா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை 07-11-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்: +94 21 222 1679
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/11/2021 07:10)
