திருமதி. இந்திராணி தியாகராஜா

(இளைப்பாறிய ஆசிரியை - BA பட்டதாரி)

இந்திராணி தியாகராஜா

தோற்றம்: 13 ஜூலை 1943 - மறைவு: 22 நவம்பர் 2024

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இந்திராணி தியாகராஜா அவர்கள் 22-11-2024 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சாமியன் அரசடி,  நெல்லியடி கரவெட்டியைச் சேர்ந்த பொன்னையா (வீரக்கோன்)-மனோன்மணி தம்பதியினரின் அருமை புதல்வியும்,

காலஞ்சென்ற நடேசு - மீனாட்சி தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா (Former Medical Assistant Ceylon Gold Stores) அவர்களின் ஆருயிர் துணைவியும்,

விஷ்ணு பிரஷாந்தி (Hatton National  Bank PLC), ஸ்ரீ கௌரி (கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

எரிக் நிருபன் (Hatton National Bank PLC - Credit Admin), மயூப்பிரியன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகப்ரதாபாஷினி, கெனின்சுபலக்ஷன், அம்ருதன், ஆகாஷ், தியாகேஷ், மத்யூ அலெக்சாண்டர், பிரிட்டனி ஆகியோரின் அம்மம்மாவும்,

புஷ்பராணி, காலஞ்சென்றவர்களான பொன்மணி தேவி, செல்வராணி மற்றும் ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற நடனயாதம், குமாரசிவம், தளையசிங்கம், மனோராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் மோதர வீதி, கொழும்பு-13 இல் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/11/2024 05:00)