திருமதி. இந்திராணி யோகேஸ்வரன்

இந்திராணி யோகேஸ்வரன்

தோற்றம்: 07 ஏப்ரல் 1952 - மறைவு: 24 ஆகஸ்ட் 2021

03ம் கட்டை கல்வியங்காடு யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி  இந்திராணி யோகேஸ்வரன் அவர்கள்  24-08-2021ம் திகதி செவ்வாய்கிழமை அன்றுஇறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு. யோகேஸ்வரன் (முன்னாள் அதிபர், புத்தூர் மெதடிஸ் மிஷன் பாடசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் சரஸ்வதி அவர்களின் அருமை மகளும்,
 
நிர்மலன் (கனடா),விமலன் (ஆசிரியர், மிருசுவில் அ.த.க.பாடசாலை), நிர்த்திகா, விர்த்திகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சோபனா (கனடா), கௌசல்யா (ஆசிரியை கிளி-மாசார் அ.த.க பாடசாலை), ராஜ்குமார் (எவசைன் ரான்ஸ்போட்), விமலன் (விமல் ஸ்ரூடியோ, அளவெட்டி), ஆகியோரின் அன்பு மாமாயாரும்,

கெவின், லருஷன், ஜஸ்வின், கிரிஸ்விக், ஆரணியா, கரிஷான், பிரீத்திகா, ரிஷிகா ஆகியோரின் அருமைப் பேர்த்தியாரும்,
 
குகானந்தன், அமரர் குகராணி, ஜெயராணி, பிறேமராணி, சிவானந்தன்,நிர்மலராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
விலாசம்:-
 
3ஆம்,கட்டை
கல்வியங்காடு,யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு:-
 
மகன்:  +94 77 413 0007,  +94 21 223 0083

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/08/2021 05:08)