திருமதி. இந்திராவதி கந்தசாமி (மணி)

இந்திராவதி கந்தசாமி (மணி)

தோற்றம்: 02 பெப்ரவரி 1949 - மறைவு: 25 ஆகஸ்ட் 2025

யாழ். கந்தர்மடம் மணல்தறை வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இந்திராவதி கந்தசாமி அவர்கள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா - தனபாக்கியவதி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மணிவண்ணன், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நாவேந்தன் அவர்களின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற தமிழ்க்கவி, கவிப்பிரியா, அபிநயா, தமிழ்மாறன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

மதிவதனசேகரம், வரதசேகரன் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

காலஞ்சென்ற கெங்காதரதேவி, கனகபூசனி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இல-43/1, மணல்தறை வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/08/2025 04:00)