Mrs. Inthumathy Uthayanan
Date of Birth: 07 January 1946 - Deceased: 20 July 2026
கண்டி - நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இந்துமதி உதயணன் அவர்கள் 20-07-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற உதயணன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுசீந்திரன் (இந்திரன்), காலஞ்சென்ற ரஜனி, ராகுலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிஷா, விஜயகுமார், கௌதமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அஞ்சலி, ஆதவன், பார்கவி, சின்மயன், ஆதர்ஷன், அபிநயா ஆகியோரின் அருமை பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சதானந்தம், மனோகரன், ரஞ்சன், யோகேஸ்வரன், ஞானேஸ்வரி, நித்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேஸ்வரி, காலஞ்சென்ற தேவராஜா, வாமதேவன் , சபாநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 27-07-2026 திங்கட்கிழமை காலை 8:30 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
இந்திரன் (மகன்):- +44 774 034 1597
ராகுலன் (மகன்):- +1 416 917 7248
விஜயகுமார் (மருமகன்):- +1 647 472 0358
சுகன்யா மங்கேஷ்கர் (பேத்தி):- +1 647 273 9092
www.tamilthakaval.org
