செல்வி. ஐரீன் கிருபராணி வில்லியம்ஸ்
தோற்றம்: 25 ஜனவரி 1992 - மறைவு: 12 ஆகஸ்ட் 2021
ஐக்கிய அமெரிக்கா Maryland Bowie ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஐறீன் கிருபராணி வில்லியம்ஸ் அவர்கள் 12-08-2021 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வின்ஸ்ரன் தர்மறாஜன் வில்லியம்ஸ், கிரேஸ் புஷ்பராணி(புஷ்பா) தம்பதிகளின் அன்பு மகளும்,
கிறிஸ்டீனா நேசராணி(நேசி) வில்லியம்ஸ், டானியேல் ஆனந்தராஜன்(ஆனந்தன்), ஜோய்ஸ் அருள்ராணி(அருள்- இணை சகோதரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வு கோவிட் தொற்றுக் காரணமாக தனிப்பட்ட முறையில் குடும்பத்தாருடன் 15-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
நினைவேந்தல் நிகழ்வு கோவிட் பெருந்தொற்றுக் காலத்துக்குப் பின்னர் ஒழுங்கு செய்யப்படும்.
கிருபாவின் நினைவாக மலர்களை அனுப்புவதற்குப்பதிலாக, இலங்கையில் போர்க்காலங்களில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில், கீழே உள்ள இணைப்பில் நிதியை வழங்கலாம்
.
www.tamilthakaval.org
