திருமதி. இதயராஜா பேரின்பமணி
தோற்றம்: 25 ஜூன் 1956 - மறைவு: 13 அக்டோபர் 2026
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இதயராஜா பேரின்பமணி அவர்கள் 13-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேல்முருகு - மகேஸ்வரி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற கோணேசராசா - கனகரெத்தினம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
இதயராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சண்முகராஜா, மகேந்திரன், ஜெயமணி, கௌரிதேவி, வசந்தகுமார், காலஞ்சென்ற மனோரஞ்சிதன், நவநீதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அஜந்தா, நகுலேஸ்வரராஜா, சுகிர்தராஜா, ரதினி, தனேஷா ஆகியோரின் பாசமிகு தாயும்,
மயூரன், கிமாட்சினி, சோபா, விக்னேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிஷானி, ஷிவானி,ருத்ரக்ஷயா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-10-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 04.00 மணியளவில் இல- 1007, அன்புவழிபுரம் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, சரீரம் திருகோணமலை இந்து பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 311 0327
+94 77 601 4723
www.tamilthakaval.org
