திரு. ஜே.எக்ஸ். செல்வநாயகம்

(வட மாகாண ஆளுநரின் முன்னாள் உதவி செயலாளர், ஊர்காவற்றுறை, நெடுந்தீவு ஆகியவற்றின் முன்னாள் உதவி அரசாங்க அதிபர்)

ஜே.எக்ஸ். செல்வநாயகம்

மறைவு: 02 ஆகஸ்ட் 2025

யாழ். நெடுந்தீவு கிழக்கு 14ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 42, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜோசப் சேவியர் செல்வநாயகம் அவர்கள் 02-08-2025 யாழ் போதனா வைத்தியசாலையில் உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்திவிட்டார்.

அன்னார்,காலஞ்சென்ற ஜோசப் (களஞ்சிய முகாமையாளர் - நெருந்தீவு ப.நோ.கூ.ச) - மாவக்கீசம்மா தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற லீனஸ்ரட்ணம் - மேரி பியாற்றீஸ் தம்பதியினரின் மருமகனும்,

மியோன் லியோனிற்றா (சமுர்த்தி முகாமையாளர் - மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம், அவர்களின் அன்புக் கணவரும்,

தவநாயகம் (ஓய்வுபெற்ற அதிபர்), புனிதகலா (இலண்டன்), புஸ்பகலா (பிரதேச செயலகம், நெடுந்தீவு) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்   04-08-2025 திங்கட்கிழமை முதல் அன்னாரது யாழ் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-08-2025 பிற்பகல் 3:00 மணியளவில் நெடுந்தீவு புனித சவேரியர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் நெடுந்தீவு கிழக்கு கட்டுராமன்சல்லி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/08/2025 04:00)