திருமதி. ஜனனி கஸேந்திரன்

ஜனனி கஸேந்திரன்

தோற்றம்: 27 ஏப்ரல் 1989 - மறைவு: 24 நவம்பர் 2025

யாழ். ஓடை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இல - 74, ஓட்டுமடம் வீதி, சிவலிங்கப் புளியடி வண்ணார்பண்ணை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜனனி கஸேந்திரன் அவர்கள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மகேந்திரன் - பத்மாசனி (ஓய்வுபெற்ற சிரேஷ்ட பதவிநிலை உத்தியோகத்தர் - யாழ். பல்கலைக்கழகம்) தம்பதியினரின் ஆருயிர்ப் புதல்வியும்,

கஸேந்திரன் அவர்களின் மனைவியும்,

லதுராமி (யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை), அபிராமி (யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

சங்கீதா (முன்னாள் முகாமைத்துவ உதவியாளர் - யாழ். திறந்த பல்கலைக்கழகம்), கல்யாணி (பிரான்ஸ்), நளாயினி (சதுரங்கப் பயிற்றுவிப்பாளர்), விக்னேஸ்வரன் (முகாமைத்துவ உதவியாளர் - நிதிக்கிளை யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவரூபன் (முகாமையாளர் - ஜனசக்தி இன்சூரன்ஸ்), புஷ்பகாந்தன் (பிரான்ஸ்), கோகுலன் (தகவல் தொழில்நுட்பவியலாளர் - ) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவசங்கர், சிவப்பிரியன், சமீரா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

ஆஷிகா, மாயோன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-11-2025 வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/11/2025 00:00)