Miss. Jayakkumar Ruksana
Date of Birth: 16 April 2014 - Deceased: 06 July 2025
மட்டக்களப்பு பனிச்சஞ்கேணியைப் பிறப்பிடமாகவும். வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. ஜெயக்குமார் ரக்ஸனா அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ஜெயக்குமார் - காலஞ்சென்ற சீதாலெட்சுமி தம்பதியினரின் பாசமிக்க மகளும்,
அபிதா, ரிக்சன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, தங்கராசா, தேவரசி மற்றும் மாதம்மா ஆகியோரின் பேத்தியும்,
இராஜேஸ்வரி, மங்கையற்கரசி, மகாதேவி, காலஞ்சென்ற சந்திரகுமாரி, ரஞ்சிதமலர், சிறிகரன், பிறேம், காலஞ்சென்ற சந்திரசேகரன், ரகுநாதன், செல்வநாயகம், கோபாலசிங்கம், ரதி, சமந்தா, கலைமதி ஆகியோரின் பெறாமகளும்,
தெய்வேந்திரன், குழந்தைவேல், ஜெயந்தி, பிரியா, பிறேமலதா, உதயா, கமல்தேசப்பிரிய ஆகியோரின் மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-07-2025 திங்கட்கிழமை மாலை 4:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பனிச்சங்கேணி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
