திருமதி. நாட்டியகலைமணி ஜெயந்தி சண்முகலிங்கம்

(ஆசிரியர்/ஸ்தாபகர் - சிவகலாபவனம் நடனப்பள்ளி)

நாட்டியகலைமணி ஜெயந்தி சண்முகலிங்கம்

தோற்றம்: 01 அக்டோபர் 1954 - மறைவு: 15 ஜனவரி 2026

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா - Brampton னை வசிப்பிடமாகவும் கொண்ட நாட்டியகலைமணி திருமதி. ஜெயந்தி சண்முகலிங்கம் அவர்கள் 15-01-2026 வியாழக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், 

காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் (தலைமை ஆசிரியர்) - லட்சுமிபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சண்முகலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

அபிராமி, ரஜீவகரன், வரகுணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நளாயினி, நிர்த்திகா ஆகியோரின் மாமியாரும்,

குகவரதராஜா, இந்திராணி (இலண்டன்), காலஞ்சென்ற ரதிதேவி, பவானி, நந்தன் (இலண்டன்), காலஞ்சென்ற சிவா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லட்சுமி, காலஞ்சென்றவர்களான புவனந்திரன், ஆலாலசுந்தரம் மற்றும் ரஞ்சனி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அர்ஜுன், இமையா, தோர்வி, ரியான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-01-2026 சனிக்கிழமை அன்று மாலை 05:00 - 09:00 மணி வரையும், 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 08:00 - 11:00 மணி வரையும் Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளை தொடர்ந்து திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/01/2026 00:00)