திருமதி. ஜீவரஞ்சிதம் ஞானலிங்கம்
(முன்னாள் உதவி ஆணையாளர் நாயகம் - இலஞ்ச ஊழல் திணைக்களம், கொழும்பு)
தோற்றம்: 15 செப்டம்பர் 1960 - மறைவு: 26 பெப்ரவரி 2025
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜீவரஞ்சிதம் ஞானலிங்கம் அவர்கள் 26-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு.திருமதி வைத்திலிங்கம் தம்பிதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானலிங்கம் (கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மனோரஞ்சிதம் (ஆசிரியை), நீதியரசர் ஶ்ரீஸ்கந்தராஜா (முன்னாள் தலைவர் - மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு) ஆகியேராின் அன்புச் சகோதரியும்,
ஞானசம்பந்தர் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற மாணிக்கவாசகர், செல்வராசா (முன்னாள் செயலாளர் - நகரசபை, வவுனியா), உமாதேவி (ஓய்வுநிலை ஆசிரியை), காலஞ்சென்ற ஶ்ரீஸ்கந்தன், தியாகலிங்கம் (இலண்டன்), காலஞ்சென்றவர்களான செல்வராணி, வரதலிங்கம் மற்றும் செல்வமதி (ஜேர்மனி), கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மதுரன் - திவ்வியாவின் அன்புச் சித்தியும்,
சுகோதயன் - சிந்துஜா, அருணோதயன் - கிருஷ்ணானந்தி ஆகியோரின் அன்பு அத்தையும்,
தரணீஷ், கவினேஷ், சேயோன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
