திருமதி. ஜெகதாம்பிகை கணேசலிங்கம்
தோற்றம்: 15 பெப்ரவரி 1944 - மறைவு: 26 ஜூலை 2026
யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ஜெகதாம்பிகை கணேசலிங்கம் அவர்கள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புன்னாலைக்கட்டுவன் காலஞ்சென்ற புரக்டர் இளையதம்பி - மகேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், மாவை கொல்லங்கலட்டி காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை - தங்கம் தம்பதியினரின் மருமகளும்,
அப்பாப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களின் மனைவியும்,
சூரியநாராயணன், வேணுகோபாலன், சிவபாலன், சிறிராகவன், சிறிதேவி, மகேஸ்வரன் ஆகியோரின் சகோதரியும்,
தேம்பாமலர், வசந்தா, மாலதி, யஸ்மின், யோகசிங்கம், வாசுகி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற ராஜமலர், சிவலிங்கம். தேம்பாமலர், புனிதமலர். தவலிங்கம் ஆகியோரினதும் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
