Mr. Jegatheesan Thiruchendur

Jegatheesan Thiruchendur

Deceased: 16 November 2025

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ் சுழிபுரத்தை வதிவிடமாகவும், பின்னர் கனடாவைத் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. ஜெகதீசன் திருச்செந்தூர் அவர்கள் சற்று முன்னர் கனடாவில் இறைபதம் அடைந்துவிட்டார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருச்செந்தூர் - பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (அப்போதிக்கரி) - சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

மகேஸ்வரன் (மகேஸ் - பிரான்ஸ்), யோகேஸ்வரன் (யோகேஸ் - கனடா) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும், 

அருள்செல்வி (அருள் - பிரான்ஸ்), நித்தியா (நித்தி - கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானாம்பிகை, இரட்ணம், மகேஸ்வரி அப்பச்சி, பரமேஸ்வரி சுப்பிரமணியம், குணதீசன் (கணம் - சுழிபுரம்), புவனேசன் (பவன் - பிரான்ஸ்), ருக்குமணி சிவநேசன் (மணி - கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றர்களான சிவராஜா (பெரிய மாம்பழம் - கொழும்பு), சிவகுமார் (மாம்பழம் - கனடா), சிவானந்தன் (அவுஸ்திரேலியா), இரத்தினேஸ்வரி அருளானந்தன் (பபா - கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியா (பிரான்ஸ்), Dr. வித்தியா (பிரான்ஸ்), ஹரி (கனடா), ஹரினி (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:00 - 8:00 மணி வரை St.John's Dixie, Cemetery & Crematorium (Mississauga, ON, 420 Dundas StE, Mississauge, ON L 5A 1X5) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-11-2025 வியாழக்கிழமை காலை 9:00 இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/11/2025 05:29)