Mrs. Jegatheeswaran Nirmala
Date of Birth: 27 April 1959 - Deceased: 03 August 2024
யாழ். முருகனகம் வாளித்தொழிற்சாலை வீதி, பளை வீமன்காமம் வடக்கு, மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், இல-37/22,1 ஆம் ஒழுங்கை, பிறவுண் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெகதீஸ்வரன் நிர்மலா அவர்கள் 03-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-கமலாதேவி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீ.கே. அன்னலிங்கம்-இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
ஜெகதீஸ்வரன் (இரத்தினாஸ் வைண்டிங் வேக்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
சஞ்ஜீவன் (இரத்தினாஸ் உரிமையாளர்), சோபிகா (அபிவிருத்தி உத்தியோகத்தர்- RDHS முல்லைத்தீவு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புவனராணி, சாந்தி, சிவபாலன், உமைபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகேஸ்வரன் (சுவிஸ்), அருளேஸ்வரன் (அன்னலிங்கம் அன்சன்ஸ்-மன்னார்), இராஜேஸ்வரன் (இரட்னாஸ் மோட்டோஸ்-கிளிநொச்சி), கிரிஜா, விமலேஸ்வரன் (அன்னலிங்கம் அன்சன்ஸ்-மன்னார்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-08-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரின் மாவிட்டபுரம் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகளுக்காக தச்சன்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
