திருமதி. ஜெயசண்முகபாமா சிவயோகலிங்கம்
(B A Hons, DIP IN Ed, ஓய்வுநிலை பட்டதாரி ஆசிரியை - நயினா/ கனடா, ஓய்வுநிலை ஆசிரியை- நு/ மராய தமிழ் பாடசாலை , யாழ் டொன் பொஸ்கோ, நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயம், Peel District School Board)
தோற்றம்: 16 அக்டோபர் 1962 - மறைவு: 09 ஜனவரி 2026
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயசண்முகபாமா சிவயோகலிங்கம் அவர்கள் 09-01-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா (நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பரம்பரை உருத்தினர், ஆசிரியர், சமூக சேவையாளர்) - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான தருமலிங்கம் (கணக்காளர், சமூக சேவையாளர்) - செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சிவயோகலிங்கம் (ஓய்வுநிலை ஆசிரியர் - வவுனியா/ நயினாதீவு) அவர்களின் பாசமிகு துணைவியும்,
சியாமா, விதுஷா, வைஷ்ணவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கீர்த்தனன், ஞானகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆதிரா, அவினாஷ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
கமலாதேவி (பிரான்ஸ்), ஜெயசிவதாசன் (கனடா), காலஞ்சென்ற ஜெயபாமா, ஶ்ரீமுருகதாசன் (கனடா), ஶ்ரீகணேசபாமா (பிரான்ஸ்), ஶ்ரீநிமலபூசணி (இலண்டன்), கோகலாவாணி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற குணசிங்கம் மற்றும் ஶ்ரீஸ்கந்தகௌரி, கமலவேணி, ரவீந்திரகுமார், வசந்தன், பிரணதார்த்திஹரன், நீலாம்பிகை (இலங்கை), சண்முகலிங்கம் (கனடா), சரோஜினி தேவி (சுவிஸ்), மாணிக்கபூபதி (வவுனியா), காலஞ்சென்ற உருத்திரலிங்கம் மற்றும் சகுந்தலாதேவி (நெதர்லாந்து), கணேசலிங்கம் (சுவிஸ்), கோபாலலிங்கம் (கனடா), உமாகரலிங்கம் (சுவிஸ்), நடேசலிங்கம் (நெதர்லாந்து) ஆகியோரின் மைத்துனியும்,
முத்துலிங்கம், சகுந்தலாதேவி, மருதலிங்கம், தர்மலிங்கம், திரிபுராம்பாள், பாலசிங்கம், அன்னபூரணி, நந்தாவதி, சுகந்தி, சுதர்சினி ஆகியோரின் சகலியும்,
கதிரேசபிள்ளை வரதலட்சுமி (இலங்கை) , சர்வானந்தராஜா தவரூபராணி (கனடா) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவர்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-01-2026 18-01-2026 ஞாயிற்றக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 19-01-2026 திங்கட்கிழமை காலை 9:00 - 12:00 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
