திருமதி. ஜெஸ்லி புளோறிடா (ராசாத்தி)

ஜெஸ்லி புளோறிடா (ராசாத்தி)

தோற்றம்: 16 ஜனவரி 1960 - மறைவு: 28 செப்டம்பர் 2025

யாழ். ஆஸ்பத்திரி வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெஸ்லி புளோறிடா அவர்கள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிங்கராசா - றோசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தம்புக்குட்டி - கிறிஸ்ரினா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

எட்மன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சத்தியநாதன் அவர்களின் அன்புச் தங்கையும்,

கிஷானி, லின்டா (இலண்டன்), லக்‌ஷி (இலண்டன்), ஷாலு (பிரான்ஸ்), ஹரீஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தீபராஜ், தர்மசீலன் (இலண்டன்), தேவகரன் (இலண்டன்), சுந்தர் (பிரான்ஸ்), றொக்‌ஷி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷைரிக்கா, டிசூரிக்கா, மிஷானிக்கா, மக்ஸிக்கா, பியாரிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் 30-09-2025 செவ்வாய்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணியளவில் சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் சரீரம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/10/2025 04:00)