Mrs. Jesumalar Augustine (Chandra)
Deceased: 31 March 2025
நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்
2 திமோத்தேயு 4:7
இல-65/202, காக்கை தீவு, கொழும்பு - 15 யை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. ஜேசுமலர் ஒகஸ்டின் அவர்கள் 31-03-2025 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், M.G. ஒகஸ்டின் (இலங்கை மத்திய வங்கி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சாந்தி நிக்கிலஸ், அஞ்சலா ஜேசுதாசன், ராஜ்குமார், காலஞ்சென்ற பிறேம்குமார், உதயகுமார், விஜயகுமார், மகேந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நிக்கலஸ், மகேந்திரன், றூபி, வசந்தி, மகேஷ்வரி, ஜீடி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சஜீட், றஞ்சித், தானியா, ஹேர்மன், தர்ஷன் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
அயானின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனை 03-04-2025 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் சென் மேரிஸ் தேவாலயத்தில் நடைபெற்று, புகழுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- மகன்.
அன்னாரின்ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
