Mr. Jeyachandran Rasa

Jeyachandran Rasa

Date of Birth: 03 October 1945 - Deceased: 20 March 2025

யாழ். வல்வெட்டியைப் (மருந்தளவு) பிறப்பிடமாகவும், பாரிஸ் - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயசந்திரன் ராசா அவர்கள் 20-03-2025 வியாழக்கிழமை அன்று பிரான்சில் இறைபதம் அடைந்தார். 

அன்னார், சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், 

மாதுரி, ஜனித்தா ஆகியோரின் அன்புத் தந்தையும், 

காலஞ்சென்றவர்களான மல்லிகாதேவி, சந்திராதேவி மற்றும் கமலாதேவி (கனடா), மனோகரதாஸ் (ரஞ்சன் மாமா-கனடா), விமலாம்பாள் (விமலா-சுவிஸ் ) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 - 4.30 மணி வரையும், 26-03-2025 புதன்கிழமை பிற்பகல் 3.00 - 4.00 மணி வரையும் Cimetière Intercommunal des Joncherolles (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 27-03-2025 வியாழக்கிழமை காலை 9.00 - 11.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.30 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/03/2025 04:00)