திரு. ஜெயகுமார் சிவதாசன்
தோற்றம்: 26 பெப்ரவரி 1959 - மறைவு: 11 ஆகஸ்ட் 2025
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட திரு. ஜெயகுமார் சிவதாசன் அவர்கள் 11-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவதாசன் - ராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரமூர்த்தி - அரியமலர் தம்பதியினரின் பாசமிகு மூத்த மருமகனும்,
குகமினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஷிவங்கரி, சாயிஷரண், சாயிஷங்கரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரிஷிகேஷ், லஜிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவக்குமார், யோகேஸ்வரி, புவனேஸ்வரி, உதயகுமார், காலஞ்சென்ற ஈஸ்வரகுமார், சிவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சாதனா, ரவீந்திரன், ஜெரி, உமாஷங்கர், காலஞ்சென்ற ஷியாமளன், உமாமினி, நிமலன், ஷர்மிளா, ரத்தினராஜா, சுகர்ணா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மாதுமை, பிரணவேஷ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
நிரோஷன், செல்சி, ஹரிஷ்ணா, கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஆர்யா, சூர்யா, ஷிவேதா, ஷாயிஷா, தாட்சாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆர்யன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 18-08-2025 திங்கட்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் உடலம் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
