Mrs. Jeyagowry Krishnamurthy (Kutty)
Deceased: 18 May 2024
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் பத்திரகாளி கோவிலடியை வசிப்பிடமாகவும், கொண்ட திருமதி. ஜெயகௌரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 18-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி இராசதுரை - சிவபாக்கியம் தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற திரு.திருமதி கனகரத்தினம் - புஸ்பகுணம் தம்பதியினரின் மருமகளும்,
கிருஸ்ணமூர்த்தி (ஆசிரியர் - யா/பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
அபர்ணா (ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் - கொழும்பு), நிருத்திகா (மாணவி- விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயந்தன் (பிரான்ஸ்), முகுந்தன், ஜெயலட்சுமி, பிரபாகரன், கருணாகரன் (லண்டன்) ,காலஞ்சென்ற ஜெயந்தினி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
திருமதி சுகுமார் புஷ்பராணி (ஆசிரியர் - மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை), கமலவதனம் (பிரான்ஸ்), கௌரி, உதயரட்ணம், லோகேஸ்வரி, துர்க்கா (லண்டன்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-05-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
