திரு. ஜெயகுமார் தர்மலிங்கம் (சாந்தன்)

ஜெயகுமார் தர்மலிங்கம் (சாந்தன்)

தோற்றம்: 14 பெப்ரவரி 1958 - மறைவு: 26 நவம்பர் 2022

யாழ். தெல்லிப்பழை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயகுமார் தர்மலிங்கம் அவர்கள் 26-12-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தர்மலிங்கம், இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

நீதிராஜா, பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசீலாகுமாரி (வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயஹரன் (கனடா), திவ்யரூபன் (இலங்கை), ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுகுமார் (பிரான்ஸ்), யசோ (இத்தாலி), தேவகி (டென்மார்க்), ஜானகி (சுவிஸ்), ஜீவா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/01/2023 03:54)