திருமதி. ஜெயலட்சுமி பத்மநாதன் (இராசு அக்கா)
தோற்றம்: 06 பெப்ரவரி 1937 - மறைவு: 07 ஜனவரி 2021
யாழ். தெல்லிப்பழை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி பத்மநாதன் அவர்கள் 07-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு & திருமதி துரைசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
அருள்குமார் (அருள்- பிரான்ஸ்), சசிகலா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகலட்சுமி சிவபாதம் (மலேசியா), இராசலட்சுமி மகாதேவன் (கொழும்பு), சிறீஸ்கந்தராஜா (பிரான்ஸ்) மற்றும் கனகசபை (கணேசன் - பிரான்ஸ்), மகாலிங்கம் (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கதிர்காமராஜா (கானா- லண்டன்), சந்திரகலா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அமோதினி, வழவன், ஆரணி, மதுரான், ஆதவன், பிரணவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
