Mrs. Jeyalakshmy Kandasamy
(இளைப்பாறிய கணித ஆசிரியை- யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, வல்வை சிவகுரு வித்தியாசாலை, பேராதனை தமிழ் மகாவித்தியாலயம், மல்லாவி யோகபுரம் மகாவித்தியாலயம், இமையாணன் அ.த.க பாடசாலை, முன்னாள் கனடா CIBC வங்கி)
Date of Birth: 20 January 1953 - Deceased: 28 June 2024
யாழ். இமையாணன் மேற்கு உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயலட்சுமி கந்தசாமி அவர்கள் 28-06-2024 வெள்ளிக்கிழமையன்று ஒன்றாரியோ கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலம்சென்ற சேனாதிராஜா – இராசம்மா தம்பதியனரின் அருமை மகளும்,
காலம்சென்ற பொன்னையா பாக்கியம் தம்பதியனரின் பாசமிகு மருமகளும்,
கந்தசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சேயோனின் அன்புத் தாயும்,
சத்தியலட்சுமி, இரவீந்திரநாதன், இராஜதிலகம், காலம்சென்ற சித்திராலட்சுமி, சுரேந்திரநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலம்சென்றவர்களான அற்புதசுந்தரி, சுப்பிரமணியம், முத்துக்குமாரசாமி, ஆறுமுகசுவாமி, லோகநாயகி ஆகியோரின் அன்பு மருமகளும்,
குமாரசுப்பிரமணியம், பராசக்தி, தனலட்சுமி, மங்கையர்க்கரசி, இந்திராதேவி, சித்திராதேவி, முரளிதரன், குமுதினி, முகுந்தன், வாஹினி, மாதினி, ஜனனி, துஷ்யந்தன், மற்றும் அமரர் பாலகிருஷ்ணேஸ்வரன், இரஞ்சிதராணி, விபலினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவஹாரிணி, நாதஸ்வரூபிணி (இனிமை), வித்தியானந்தி ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும், சியாமசுந்தரன், தாரிணி, பாமினி, அபிராமி, கோசலைகோபன் ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
அன்னாரது புகழுடல் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave., Markham, ON L3R 5G1) இல் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை (கனடா நேரம்) அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர், அங்கே இறுதிக்கிரியைகள், மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை நடைபெற்று பிற்பகல் 2:00 மணியளவில் Highland Hills Crematorium இல் அன்னாரது புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
