திருமதி ஜெயலக்ஷ்மி யோகராஜா
தோற்றம்: 22 டிசம்பர் 1948 - மறைவு: 23 ஜனவரி 2024
யாழ். வல்வெட்டித்துறை, "காட்டுவளவை" பிறப்பிடமாகவும், கொழும்பு, பருத்தித்துறை, சென்னை, லண்டன் ஆகிய இடங்களை வசித்தவருமான திருமதி. ஜெயலக்ஷ்மி யோகராஜா (லக்ஷ்மி அம்மா / தங்கன்) அவர்கள் 23-01-2024 செவ்வாய்க்கிழமை தை மாத பூர்வபக்க திரயோதசி திதியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா (ராசதுரை) - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் ஏக புதல்வியும்,
காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம் (ராசலிங்கம்) - யோகாம்பிகை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற யோகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
பார்த்தீபன் (பாபு - பிரித்தானியா), காண்டீபன் (அவுஸ்திரேலியா), பகீரதன் (பகீ - பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சௌமியா, சுதாஸ்வரி, இன்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாவலா, நாவலன், மாவலன், ஹரி, ஹேசல் ஆகியோரின் ஆசை அப்பாச்சியும்,
காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரமூர்த்தி, தணிகாசலம் (கலாநிதி ஸ்டோர்ஸ்), திருநாவுக்கரசு (சந்திரா ஸ்டோர்ஸ்), சுந்தரமூர்த்தி மற்றும் விஸ்வநாதப்பிள்ளை (தம்பி அண்ணா - வல்வெட்டித்துறை), தங்கராசா, ராமச்சந்திரன் (ராமு கடை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-01-2024 புதன்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் 10.30 வரை Hill House St Helier Hill House, Bishopsford Road, Morden, SM4 6BL இல் நடைபெற்று, முற்பகல் 11.15 மணி முதல் 12.15 வரை North East Surrey Crematorium, Lower Morden Lane, Morden, SM4 4NU இல் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
