திருமதி. ஜெயலட்சுமி இராமசந்திரன்
(இளைப்பாறிய அதிபர் - யொக்ஸ்பார்ட் தமிழ் வித்தியாலயம், ஸ்டேஷன், வட்டகொட)
தோற்றம்: 27 அக்டோபர் 1942 - மறைவு: 14 ஆகஸ்ட் 2025
கண்டி - கெங்கல்லையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - தெஹிவளை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயலட்சுமி இராமசந்திரன் அவர்கள் 14-08-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சக்திவேல்பிள்ளை - வள்ளியம்பாள் தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்ற சக்திவேல்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சரஸ்வதி, ஆனந்தமூர்த்தி, கமலாம்பாள், நீலாட்சி, கிருஷ்ணமூர்த்தி, காளமேகம் மற்றும் ஜோதிமதி, நீலமேகம் ஆகியோரின் சகோதரியும்,
சந்திரகலாதேவி, ரமேஷ், மைதிலி, சந்திரிக்கா, சுபாஷினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
பிரபாகரன், கஜீனா, யோகநாதன், கனகராஜா ஆகியோரின் மாமியாரும்,
லிதாஷினி, கவிமதுரன், ஆர்கவி, சஜீந்தின், சச்சீந்திரன், கௌசிகன், ரஹினியா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-08-2025 வெள்ளிக்கிழமை முதல் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை வரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-08-2025 ஞாயிறு அன்று மதியம் 1:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:30 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
