திருமதி. ஜெயலட்சுமி துரைராஜா
தோற்றம்: 03 அக்டோபர் 1938 - மறைவு: 16 நவம்பர் 2024
யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயலட்சுமி துரைராஜா அவர்கள் 16-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,
வேலுப்பிள்ளை துரைராஜா (முன்னாள் வடக்கு கிழக்கு பிரதம கணக்காளர்-திருகோணமலை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
வினோதா சந்திரகுமான் (ஓய்வுபெற்ற ஆசிரியர்-கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புத்தாயாரும்,
சின்னப்பா சந்திரகுமாரன் (முன்னாள் இலங்கை வங்கி உத்தியோகத்தரும், IT Manager- சவூதி அரேபிய) அவர்களின் அன்பு மாமியாரும்,
Dr. அஞ்சலியா அமரநாத் (அமெரிக்கா), Dr. அபிவர்மா (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அம்றிதாவின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, நடராஜா, தம்பிநாத், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்.
காலஞ்சென்ற ஜெயராஜா (தாவடி), கணேசலிங்கம் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கிருபானந்தன் (பிரான்ஸ்), இராஜதுரை (சுவிஸர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி வரை அன்னாரின் தெஹிவளை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-11-2024 திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
