திருமதி. ஜெயலக்க்ஷ்மி சிவலிங்கம்
தோற்றம்: 16 அக்டோபர் 1950 - மறைவு: 17 ஏப்ரல் 2026
யாழ். அளவெட்டி அலுக்கைச் சந்தி பிளவதரையைப் பிறப்பிடமாகவும், A168/12 கங்காணி கார்டன், மாதொலை, அவிசாவளையை வசிப்பிடமாகவும் தற்போது உருத்திரா மாவத்தை வெள்ளவத்தையில் வசித்தவருமான திருமதி. ஜெயலக்ஷ்மி சிவலிங்கம் அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.துரைராசா - நாகேஸ்வரி தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - கனகம்மா தம்பதியினரின் மருமகளும்,
சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயராணி (சுவிஸ்), ஸ்ரீஸ்கந்தா (கொழும்பு), சிவகுமார் (இலண்டன்), ரவிக்குமார் (இலண்டன்), இந்திரகுமார் (பிரான்ஸ்), ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாகபூஷனம், நவேந்திராணி, நவபுஷ்பம் ஆகியோரின் மைத்துனியும்,
நிஷாந்தியின் (ஆசிரியை) தாயாரும்,
சுதாகரனின் (ஆசிரியர்) மாமியாரும்,
ஹர்ஷாயினி, ஷபர்ணா ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் ஈமச்சடங்குகள் நடைபெற்று, மாலை 04.00 மணியவில் திருவுடலா கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
